Sun. May 28th, 2023

Health

 • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் !!
  குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பால் !!

  குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொதுப்பது அவசியமாகும். எந்த முறையில் மகப்பேறு நடந்திருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டுவது நல்ல தொடக்கமாக குழந்தைக்கு அமையும்.

  முதல் மூன்று நாட்களில் சுரக்கும் சீம்பால் அளவில் குறைவானது ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியில் மற்றும் அது தரும் ஆற்றலில் மிகுந்தது. தாயிடமிருந்து சீம்பால் உற்பத்தி 24 வாரம் கர்ப்பம்கடந்தபின் ஆரம்பிக்கிறது. உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள 24 வாரம் கடந்த சிசுவிற்கு சீம்பாலை கலந்து தரலாம். அதிகப் புரதம் கொழுப்பு எதிர்ப்புச் சத்து நிறைந்த திரவத்தங்கம் சீம்பால். உயிர்ப்பொருட்கள், திசுக்கள், நொதிகள் குடல் வளர்ச்சி ஊக்கிகள், எதிர்ப்பு சக்தி என பல உடனடி நோய்எதிர்ப்பிற்கு உதவுகின்றன.

  முதல் மூன்று நாட்களுக்கு குழந்தைக்குத் தேவையான நீர்ச்சத்து மிகக்குறைவு எனவே குறைந்த அளவில் (பதினைந்திலிருந்து முப்பது மில்லி) சுரக்கும் சீம்பால் போதும்.

  பிறகு சுரக்கும் தாய்ப்பாலை சத்துக்களின் தன்மை அடர்த்தி மற்றும் அளவு ஒவ்வொரு முறையும் மாறுபடும். தாகத்தை உடனே குறைக்க நீர் நிறைந்தும் பசியாற உடனடி லாக்டோஸ் சர்க்கரை மிகுந்தும் இருப்பது முன் பால் .இதை குடித்து விட்டு தூங்க தொடங்கினால் குழந்தையை எழுப்பி விட்டு பால் தருவதை தொடரவேண்டும். தாகமும் பசியும் மட்டுப் பட்டபின் குடிக்கும் போது சுரக்கும் பின்பாலில் புரதம் மற்றும் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் இவை ஆற்றலையும் உடல் வளர்ச்சியையும் திசுக்களின் பிரிதல் முதிர்தலையும் மேம்படுத்தும்.

  பேரழிவு பேரிடர் காலங்களில் குழந்தைக்கு பிரச்சனையின்றி தரக்கூடிய ஒரு உடனடி உணவு தாய்ப்பால் மட்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஊட்டச் சத்துப்பிரச்சினைகள், இரத்தசோகை, நிமோனியா ,வயிற்றுப்போக்கு, பற்சொத்தை ,ஒவ்வாமை ஆகியவை வரும் வாய்ப்பு மிகக் குறைவு.

  தாய்ப்பாலில் மிகுந்துள்ள டாரின் மற்றும் டி ஹெச் ஏ காரணமாக குழந்தையின் ஐக்யூ புள்ளிகள் 10 வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. தாய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்து அளவு குறைவாக இருந்தாலும் முழுவதுமாக உறிஞ்சப்படும் லேக்டோபெரின்குடலில் உள்ள கிருமிகளைக் கொன்று எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

Economy

 • வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் !!
  வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் !!

  வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும்.

  வெற்றிலை ஒரு வலுவான, காரமான மற்றும் நறுமண வாசனையைக் கொண்டுள்ளது, மேலும் இது வாய் புத்துணர்ச்சியூட்டலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

  வெற்றிலையில் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வெற்றிலை மற்றும் சாவிகோல், பீட்டல்பீனால், யூஜெனால், டெர்பீன் மற்றும் கேம்பீன் போன்ற இரசாயன கூறுகள் உள்ளன.

  பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.

  வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

  வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

Latest News

உடல் எடையை குறைக்க எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்…?

சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம். உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும்...

தலைமுடியில் உள்ள பொடுகு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்க உதவும் கறிவேப்பிலை !!

சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது வேப்பிலையாகும். உபயோகப்படுத்துகின்றவர்கள் அதில் மருத்துவக் குணம் கறிவேப்பிலையில் வைட்டமின் ‘A’ சத்து மிக அதிகமாக உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் அடங்கியுள்ளது. கண்களுக்கு வலிமை தருவது...

உதடுகளை பராமரிக்க உதவும் சில அற்புத அழகு குறிப்புகள் !!

வறண்ட, கருமையான உதடுகள் ஒட்டுமொத்த முகப்பொலிவையே குறைக்கும் விதமாக அமையலாம். எனவே சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிப்பதைப் போலவே உதடுகளை பராமரிப்பதும் முக்கியமானது. உதடுகள் சருமத்தின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் மிகவும் மென்மையானவை....

சீந்தில் கொடி மூலிகையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள...

கீழாநெல்லி மூலிகையில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கீழாநெல்லி ஹெப்படைட்டிஸ்...