Fri. Dec 9th, 2022

பெண்களை மிகவும் அதிசியமானவர்கள். ஆபத்தானவர்கள் கூட ஏனினில் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்பது பழமொழி. இப்படி பட்ட ஆச்சரியமான பெண்களை பற்றி சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள். 

பெண்களுக்கு மிகவும் பிடித்தது உடைகள் வாங்குவது. ஒரு அரை முழுவதும் உடைகள் இருந்தாலும் தனக்கென உடைகள் ஏதும் இல்லை என புலம்பக்கூடியவர்கள் பெண்கள். இவர்கள் ஏறக்குறைய தன் வாழ்நாளில் ஒரு வருடம் முழுவதையும் உடைகளை தேர்வு செய்வதில் கழிக்கின்றனர். பெண்கள் ஒரே நேரத்தில் பல விஷியத்தை பற்றி யோசிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இது அனைவருக்கும் தெரியும் இதில் தெரியாதது என்னவென்றால் இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு காதுகளை இரண்டு வெவ்வேறு விஷயங்களை கேட்பதில் பயன்படுத்துவார்களாம். இது உண்மையில் அதிசியம் தான். இதனால் தான் என்னவோ பெண்களை ஏமாற்றுவது சற்று கடினமாகவே இருக்கின்றது. 

பெண்கள் எப்போதும் ஆண்களை விட குறைவாகவே பொய் பேசுவார்கள். ஆனால் பேசும் பொய்யை மற்றவர்கள் உண்மை என நம்பக்கூடிய அளவிற்கு தத்ரூபமாக பேசும் ஆற்றல் உடையவர்கள் பெண்கள். அதுமட்டுமிடன்றி தன்னிடம் கூறப்படும் பொய்களையும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். 

நுகரும் திறனும், நிறங்களை பிரித்து பார்க்கும் திறனும் ஆணைகளை விட பெண்களுக்கு 20 சதவீதம் அதிகமாகவே உள்ளது. இதனால் தான் பெண்களால் நிறைய நிறங்களை உணர முடிகிறது. மேலும் இவர்கள் ஆண்களை விட மிகவும் அதிகமான வார்த்தைகள் ஒரு நாளைக்கு பேசுவார்கள். இது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம்.

பெண்கள் ஆண்களை விட வலியை அதிகமா தாங்குவார்கள். இந்த கருத்து ஏற்றுக்கொள்வதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஏனெனில் சிறு வயதில் இருந்தே பெண்கள் உடலளவில் பலம் குறைந்தவர்கள் என்று நினைத்து வளர்ந்தவர்கள் நாம். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் சக்தி ஒரு பெண்ணுக்கு இருக்குமானால் அவளால் தாங்க முடியாது வலியென்று இந்த உலகில் எதுவும் இல்லை. 

பின்னர், தற்போது இருக்கும் பெண்களில் முக்கால்வாசி பேர் உதட்டு சாயம் பயன்படுத்துகிறார்கள். இது பெண்களுக்கு பிடித்தமானது. பல நிறங்களில் பல விதத்தில் உதட்டு சாயம் வாங்கி வைத்துக்கொள்வார்கள். தினமும் உதட்டு சாயம் பூசும் பட்சத்தில் பெண்கள் தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஐந்து கிலோ உதட்டு சயமாவது சாப்பிட நேரிடும். சாதாரண பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் அப்போது சினிமா நடிகைகள் பத்தில் இருந்து பதினைந்து கிலோ வரை சாப்பிடுவார்கள் போலும். 

பெண்கள் எப்போது சிறு பிரெச்சனைகளுக்கு கூட அதிகம் கவலைபட கூடியவர்கள். அதே நேரத்தில் ஆண்களை விட பெண்களை ஒரு கஷ்டத்தில் இருந்து எளிது மீண்டு வந்துவிடுவார்கள். மேலும் பெண்கள் ஒரு பிரச்னைக்கு எளிதில் தீர்வுகளை கண்டு பிடித்துவிடுவார்கள். பெண்களால் பல இடங்களில் சுயமாக முடிவெடுக்க இயலும். அழுகை என்பது பெண்களுடன் பிறந்தது. அழுகாமல் இருப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமானது. இப்படி அழுகும் குணாதிசயம் உள்ள பெண்கள் வருடத்திற்கு முப்பது அல்லது நாற்பது முறை அழுகின்றனர். சிலர் இதை விட அதிகமாக கூட அழுவார்கள். சில பெண்கள் பேசும்போதே அழுதுவிடுவார்கள். அழுகை பெண்களின் ஆழுதம். அதை வைத்து அவர்கள் பாதி காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். 

பெண்களின் மற்றொரு பண்பு அடுத்தவர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பது. சுற்றி இருப்பவர்களிடம் கருத்துகளை கேட்டு தன்னை சரி படுத்திக்கொள்ள பார்ப்பார்கள். முக்கியமாக ஆடை அலங்காரத்தில் மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்கு மிகவும் மரியாதை அளிப்பவர்கள் பெண்கள். வேடிக்கையானவர்கள் தான் இவர்கள்.

பெண்கள் ஆண்களை போல் இல்லாது தன் கோவத்தை பேச்சு அல்லது உணர்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் மாறாக செயலில் வெளிப்படுத்துவார்கள். பெண்கள் எளிதில் அழுதுவிடும் தன்மை உடையவர்கள். மற்றவர்கள் அழுதால் இவர்களுக்கு தானாக அழுகை வந்துவிடும். அழுவதற்கென்று இவர்களுக்கு தனியாக காரணம் ஒன்றும் தேவையில்லை. 

குறிப்பாக ஆண்களை விட பெண்கள் இதயநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் என்ற பாடலின் வரிக்கேற்ப பெண்களும் ஒரு பெரும் அதிசயம் தான்.

Leave a Reply

Your email address will not be published.