Fri. Dec 9th, 2022

இந்த உலகில் நாம் நிலைத்து நிற்க நமக்கு தேவை திறமை. திறமை ஒரு ஒருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். ஆனால் அனைத்து திறமைகளுக்கும் முதன்மை திறமை ஆளுமை. ஆளுமை இல்லை என்றால் கடைசி வரையில் ஒருவருக்கு கீழே இருக்க வேண்டியது தான், ஆளுமை பண்பு தான் நம்மை வாழ்வில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். அதுமட்டுமின்றி ஒரு தொழில் தொடங்கவும் எந்த ஒரு கம்பெனியிலும் முதன்மை பொறுப்பு வகிக்கவும் மிக முக்கியம் ஆளுமை தான். 

இந்த உலகித்தில் நம்மால் முடியாதது என்று எதுவும் கிடையாது. கொஞ்சம் முயற்சியும் சிறிது விடா முயற்சியும் இருந்தால் போதும் யாராலும் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு உதாரணம் இன்று வாழ்க்கையில் ஜெயித்த பலரும் ஒரு சாதாரண குடும்பத்தில் அல்லது ஒரு சாதாரண பின்புறத்தில் இருந்து வந்தவர்கள் தான். 

தொழில் முனைவோர் ஒருவர் கூறுகையில் தொழில் நடத்தி ஆசைப்படும் ஒருவர் அந்த நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.

ஒரு நிர்வாகத்தை நடத்துவது என்பது அவ்வளவு சுலம்பம் கிடையாது. ஒரு செயலுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுதல், அந்த செயலை சரியானவரிடம் ஒப்படைத்தல், அந்த செயலை பின்பற்றுதல், மேலும் அந்த செயல் சரியாக நடந்து முடிந்ததா என்று சரிபார்த்தல். மேலும் வியாபார யுக்திகளை வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதல் மேலும் வருங்காலத்தில் வரும் இடர்பாடுகளை முன்னமே யூகித்து அதற்கேற்ப செயல்படுதல். முதலீட்டை பெருக்க புதிய செயல்பாடு யுக்திகள், சரியான வேலையாட்களை கூலிக்கு வைத்தால் என ஒரு நிர்வாகத்தில் மேல் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை அறிந்து செயல்பட வேண்டும். 

தன் மனதில் இருக்கும் ஒரு யோசனையை பலரின் தடைகளை தாண்டி ஒரு தொழிலாக மாற்றி. பின் அதனை ஒரு நிறுவனமாக்கி. அதன் பின் அந்த நிறுவனத்தை இடர்பாடுகளை தாண்டி வளர்ச்சியடைய செய்வது தான் ஒரு வெற்றி இதனை செய்பர்வர் தான் முனைவோர். மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும். இந்த பணிகளை சரிவர செய்து வருவதே வெற்றி காண்பதற்கான வழியாகும். 

தனித்தன்மையானது எல்லாம் தொழில் முனைவோர்களுக்கும் இருக்க வேண்டிய முக்கிய கூறுகளில் ஒன்று. முதலீடு, நல்ல யோசனை, சிறந்த வேலையாட்கள் என அனைவரும் இருந்தாலும் தனித்து முடிவெடுக்கும் தன்மையும் அவர்களின் தனித்தன்மையும் தான் அவர்களை முதன்மை பொறுப்பாளர்களாக பிரதிபலிக்கும். இவர் நிச்சயமாக இடர்கள் மற்றும் ஆபத்துகளை சந்திக்கும் மனது பொருந்தியவராக இருக்க வேண்டும். மேலும் ஒரு தொழில் என்றால் அதில் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும் ஒரு நிறுவனத்தை நடத்துபவருக்கு இது இரண்டையுமே சரி சமமாக பார்க்க தெரியவேண்டும். 

தொழில் முனைவோர்கள் இந்த நாட்டிற்கு அதிகம் தேவை. கடைசி வரை வேலையாட்களாகவே இருந்து விட்டால் நம் நாட்டின் பொருளாதாரம் நிச்சம் வளராது. நம் நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் சொந்தமாக தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை பெருகவேண்டும். எந்த ஒரு தொழிலிலும் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.

வாழ்க்கையில் ஆயிரம் தடைக் கல்லப்பா , தடைக்கல்கள் உனக்கொரு படிக்கல்லப்பா – இந்த பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் தடைக்கல்களை படிக்கல்களாக மாற்றுவோம். வருங்கால இந்தியாவை வெற்றியடைய செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published.