Fri. Dec 9th, 2022

அந்த காலத்தில் ஒரு ஊரில் ஒருவரோ இருவரோ கண்ணாடி அணிந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். அதுவும் வயதானவர்களாக தான் இருப்பார்கள். ஆனால் இன்றோ ஊரில் அனைவருமே கண்ணாடி அணிய தொடங்கிவிட்டனர். இப்பொழுதெல்லாம் கண்ணாடி அணியாதவர்களை காண்பது தான் அதிசயமாக இருக்கின்றது. கண்ணாடி அணியாத யாரையாவது பார்த்தல் உங்கள் கண்களில் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கும் அளவிற்கு இன்றைய நிலைமை உள்ளது. 

இதில் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகமாக பார்வை குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றாம் வகுப்பு செல்வதற்குள்ளேயே பல குழந்தைகள் கண்ணாடி அணியதொண்டங்கி விடுகின்றனர். இந்தியாவில் குழந்தைப்பருவ பார்வையின்மை பாதிப்பு 1,000 குழந்தைகளுக்கு 0.8 என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதில் கிட்டத்தட்ட 1 . 5 பில்லியன் குழந்தைகள் பார்வை இன்றி தவிக்கின்றனர். கேட்பதற்கே பரிதாபமாக உள்ளது. உலகத்தை பார்ப்பதற்கு உன்பே கண் பார்வையை இந்த படப்பாம்பூச்சிகள் இழந்து விடுகின்றது.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது ஆச்டிஜிமடிசம் போன்ற பிரச்சனைகள் கண்ணாடி பயன்படுத்தாததால் அல்லது முறையற்ற கண்ணாடிகளை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இதுபோல் பார்வை குறைபாடுள்ள குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. பார்வை குறைபாட்டினால் கற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். 

அமெரிக்கன் அகாடமி ஆப் ஆப்தமாலஜி (ஏ.ஏ.ஓ) ஆய்வின் படி, குழந்தைப்பருவ பார்வையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று தட்டம்மை நோய் பாதிப்பாகும். ஊட்டச்சத்து குறைப்பாடு , குறிப்பாக வைட்டமின் ஏ குறைப்பாடும் பார்வை இழப்பதற்கான முக்கிய காரணங்கள். மாலைக்கண் நோயும் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் தான் ஏற்படுகிறது. இதை குணப்படுத்தாமல் விட்டால் இது நிரந்தர பார்வை இன்மைக்கு வழி வகுக்கும். 

உலக சுகாதார அமைப்பின்படி ஒரு வருடத்திற்கு இந்த வைட்டமின் ஏ குறைப்பாட்டால் குறைந்தது இரண்டிலிருந்து ஐந்து லட்சம் குழந்தைகள் உலகமெங்கும் பார்வை இழக்கின்றனர். மேலும் இந்த குறைப்பாட்டால் பத்திற்கும் மேற்பட்டவர்கள் தன் உயிரையே இழந்து விடுகின்றனர். 

குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் குழந்தைக்கு ஏற்படும் ஒரு தோற்று நோய் தான் நியோனேட்டரம் எனப்படும். இதை ஆரம்பத்திலே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் பார்வை இழக்க நேரிடும். பொதுவாக வயதாகும்போது கண் புரை பிரச்சினை ஏற்படும் என்றாலும் பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு கண் புரை பாதிப்பு உண்டாகும். இதுவும் குழந்தை பருவ பார்வை இழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும்.

இதற்கான இன்னொரு காரணம் கிளேகோமா எனப்படும் நோய்.  கண்களில் உருவாகும் திரவ அழுத்தம் பார்வை நரம்புகளை சேதப்படுத்தும்போது இந்த பிரச்சினை உண்டாகும். பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை இருக்கும் குழந்தைகள் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.