Fri. Dec 9th, 2022

குழந்தை திருமணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இன்றளவும் இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கின்றது. தெற்காசியாவில் கிட்டத்தட்ட 6 பெண்களும், உலகம் முழுவதும் 60 சிறுமிகளும் குழந்தை திருமணம் காரணமாக ஏற்படும் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாக தினமும் இறக்கிறார்கள்.

இந்த அவலத்தை தடுப்பதற்காக சேவ் தி சில்ட்ரன் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குழந்தை திருமணம் மற்றும் சிறுவயது கற்பதால் வருடம் தோறும் இருபத்திரெண்டாயிரம் பெண்கள் இறக்கின்றனர். மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் இறப்பின் சதவீதம் அதிகமாக உள்ளது. 

பல தலைவர்கள் பல வருடங்கள் போராடி இதை ஒழித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பெண் வயதிற்கு வந்த உடனே அவளை வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அந்த பெண் குழந்தையானது காதலுக்கும் காமத்திற்கும் அர்த்தம் கூட தெறியாத நிலையில் இருக்கும். அதன் உடலும் மனமும் அதற்கு சிறிதளவு கூட தயாராக இருக்காது. அப்படி இருந்து ஆண் மிருகங்கள் அந்த குழந்தைகளை வெறும் சதைகளாக மட்டுமே பார்க்கின்றது. 

உலகத்தில் மொத்தமாக நடக்கும் இறப்புகளில் பாதி மேற்கு மட்டும் மத்திய ஆப்பிரிக்காவில் தான் நடக்கின்றது என அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாள் ஒன்றுக்கு 26 பேர் இறக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக தெற்காசியாவில் சுமார் 2 ஆயிரம் இறப்புகளும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் 650 இழப்புகளும், லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியனில் 500 இழப்பு களும் வருடந்தோறும் பதிவாகின்றன.

ஆதரவற்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி  இங்கர் கூறுகையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையின் கொடிய வடிவங்களில் குழந்தை திருமணமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் வயதான ஆண்களுடன் திருமண பந்தத்தில் இணைத்துவைக்கப்படுகிறார்கள். தங்களின் அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இழக்கிறார்கள்.

பிரசவம் ஆனது இளம் வயது பெண்களின் முதல் கொலையாக பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால் அந்த இளம் வயதில் அவர்களின் உடல் இன்னோரு உயிரை தன்னுள் வளர்ப்பதற்கு பக்குவப்படுவதில்லை. அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை குழந்தை பெற்றுக்கொள்ள தூண்டுவது ஒரு வகையான கொலை தான். 

குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தி இந்த கொடுமைகள் இனிமேலும் நடக்காமல் செய்யவேண்டும் என பல அமைப்புகளும், சமூக சீர்திருத்தவாதிகளும் போராடி வருகின்றனர். ஆனால் அந்த வேகத்திற்கு இந்த கொரோனா காலம் ஸ்பீட் பிரேக்கர் போல செயல்பட்டு வருகிறது.  சென்ற 25 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 80 மில்லியன் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

நோய்த்தொற்று காரணமாக மில்லியன் கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டன. ஊரடங்கு மத்தியில் பல பெண்கள் வன்முறை, பாலியல் தாக்குதல் போன்றவற்றை எதிர்கொண்டனர். எனவே இந்த அமைப்புகள் இன்னும் வேகமாக செயல்பட்டால் தான் குடும்ப சுமை காரணமாக அவர்கள் திருமணத்திற்கும் தள்ளப்படுவதை தடுக்க முடியும்.

ஒரு பெற்றோர்களாக, அண்ணனாக, தம்பியாக, ஒரு ஆணாக ஒரு பெண்ணாக இன்னோரு குழந்தைக்கு நடக்கும் இந்த அவலத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published.