மாதவிடாய் நாட்கள் வந்துவிட்டாலே எதற்கு கோவப்படுகிறோம் என்று தெரியாமலே கோவப்பட்டுக்கொண்டு இருப்போம். அந்த நேரத்தில் யார் எதை வந்து சொன்னாலும் நமக்கு அதை கேட்பதற்கோ திரும்ப பேசுவதற்கோ பொறுமை இருப்பது கிடையாது. மேலும் அந்த மூன்று நாட்கள் மட்டும் உடல் வலி அதிகமா இருக்கும். அடுத்தவரிடம் கோவமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதுமட்டுமின்றி அந்த நாட்களில் வாழ்க்கையின் மீதும் சுற்றி இருப்பவர்கள் மீதும் ஒரு சலிப்பு ஏற்படும்.
அந்த மூன்று நாட்களை எப்படியாவது சந்தோஷம் நிறைந்த நாட்களில் ஒன்றாக மாற்ற வேண்டும். அதற்கு சில முக்கிய குறிப்புகள். மாதவிடாய் நாட்களில் பெண்கள் கடு கடுவென இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த மூன்று நாட்களில் அவர்களுக்கு உடன் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாமல் மனம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். மன அழுத்தம், சோகம், அழுகை, மகிழ்ச்சி போன்ற மனநலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன.
இந்த மாற்றங்களின் காரணம் அந்த நாட்களில் ஹோர்மோன் சுரப்பிகள் அதிகமா வேலை செய்யும். மேலும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக ஹோர்மோன் சுரக்கும். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி என ஆரமித்து கற்பமுறுதல், மாதவிடாய் முடிவு என வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இவர்களுக்கு இந்த அறிவுரைகள் மாதவிடாய் ஆரம்பிப்பதர்க்கு முன்பே தொடங்கி விடும் பின் ரத்தப்போக்கு ஏற்பட்டு மாதவிடாய் முடிந்து அதன் பின் அந்த அறிகுறிகள் படிப்படியாக குறையும்.
இந்த அறிகுறிகள் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, தூக்கம் போன்றவற்றுடன் தொடர்புடையது. பொறித்த பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன், தூக்கமின்மை, ஒரே இடத்தில அதிகமான நேரம் உக்கார்ந்து இருப்பது. அதிக மனஅழுத்தம் ஆகியவை பி. எம்.எஸ் வீரியத்தை அதிகரிக்கும். இதை தவிர்ப்பதற்காக சீரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தேவையற்ற கோபத்தை கட்டுப்படுத்துவது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் இந்த அறிகுறிகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
சில சமயங்களில் அறிகுறிகளை தாண்டி பெண்களின் உடலையும் மனதையும் பெரிதளவில் பாதிப்பது ஒழுங்கற்ற மாதவிடாய். உடன் பருமன், தைராய்ட் போன்ற நோய்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கான காரணிகளாக அமைகிறது. ஒழுங்கற்ற மாதிவிடாயால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும். மேலும் உடல் எடை அதிகரிக்கும்.
இதை ஆரம்ப நிலையிலே கண்டு பிடித்து அதனை சரி செய்தால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். மேலும் மாதவிடாய் சுழற்சியையும் சரிபடுத்தி சீராக்கலாம்.
சில பேருக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வந்துவிடுகிறது. அதுபோல் தோன்றும் போது அதிகமான வயிற்று வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அப்போது நிறைய மாத்திரைகள் சாயப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அந்த வயிற்றுவலியை எதுவும் செய்யமுடியாது. எனவே எந்த மாத்திரைகளும் சாப்பிடாமல் அதை பொறுத்துக்கொள்வது சிறந்தது.
மாத்திரைகள் சாப்பிடுவதால் கர்ப்பம் உண்டாகும் ஆற்றல் குறையப்பெரும். மேலும் அதுவும் உடல் நலத்தை பாதிக்கும். மருந்துகள் சாப்பிடலாம் அதைத் தடுப்பதற்கு நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். மாதுளம் பழம் துவர்ப்பு சுவையுள்ள உணவுகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
பொதுவாக மாதவிடாய் ரத்த போக்கு மூன்று நாட்கள் தான் வர வேண்டும். ஆனால் சிலருக்கு இது ஏழு அல்லது பத்து நாட்கள் வரை இருக்கும். இது போன்ற நாட்களில் அவர்கள் மிகவும் சோர்வுற்று காணப்படுவார்கள். சத்தான சாப்பாடு, காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் அந்த நேரத்தில் உடலை சோர்வடையாமல் தடுக்கும்.