Sun. May 28th, 2023

வறண்ட, கருமையான உதடுகள் ஒட்டுமொத்த முகப்பொலிவையே குறைக்கும் விதமாக அமையலாம். எனவே சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிப்பதைப் போலவே உதடுகளை பராமரிப்பதும் முக்கியமானது.

உதடுகள் சருமத்தின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் மிகவும் மென்மையானவை. எனவே அவை எளிதில் நீரிழப்புக்கு ஆளாகி, வறட்சி, வெடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன.

சில துளிகள் எலுமிச்சை சாறுடன், ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து லிப் ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இந்த கலவையை நன்றாக உதட்டின் மீது தெய்த்து ஸ்க்ரப் செய்த பிறகு, உங்கள் உதடுகளை வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதன் பின்னர் வெது வெதுப்பான நீரைக் கொண்டு உதடுகளை சுத்தப்படுத்தலாம்.

பாதாம் எண்ணெய் உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதத்துடனும், குறிப்பாக சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது. பாதாம் எண்ணெயில் ஸ்க்லரோசண்ட் மற்றும் மென்மையாக்கும் பண்புகள் உள்ளன, அவை இறந்த சரும செல்களை அகற்ற உதவுகின்றன. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களில் அதிகமாக உள்ளது, இது மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளுக்கு சிறந்தது.

தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர், இது உதடுகளில் உள்ள இறந்த சரும செல்களை மென்மையாக்கவும், அகற்றவும் பயன்படுகிறது. மென்மையான, மிருதுவான உதடுகளைப் பெற விரும்பினால், தினமும் உதடுகள் மீது தேனை தடவலாம். மேலும் சர்க்கரையுடன் தேன் கலந்த கலவையை உதடுகள் மீது தேய்த்து சுத்தப்படுத்தலாம்.

சருமத்தைப் போலவே உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க கற்றாழை ஒரு சிறந்த தீர்வாகும். கற்றாழை ஜெல்லை லிப் மாஸ்க்காக பயன்படுத்தலாம் அல்லது மஞ்சள் தூளுடன் சேர்த்து பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் உதடுகளில் தடவி, 10 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published.